அமெரிக்காவில் கடந்த 20 நாட்களாக அரச அலுவலகங்கள் முடக்கம்

அமெரிக்காவில் அரச துறைகளின் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டொனல்ட் டிரம்ப் தவிர்த்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுப்பதற்கு மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அதற்காக 5.7 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 20 நாட்களாக அரச அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

அரசத் துறைகளின் முடக்கம் நீடிக்கும் நிலையில், உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

0
Shares