2019 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 % க்கு மேல் அதிகரிக்கும்

 

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 % க்கு மேல் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஜனவரி மாதத்துக்கான உலக பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு விவசாய மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக பதிவாகி இருந்தது.

அதேநேரம் கடந்த ஆண்டு நிலவிய சீரற்றக் காலநிலையில் இருந்து மீளும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 4.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares