குலதிஸ்ஸ கீகனகேயின் விளக்கமறியல் 18ம் திகதிவரை நீடிப்பு

தெமட்டகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0
Shares