பெண்ணொருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை

மாத்தறை – திக்வெல்ல – கொடகல பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் வலுப்பெற்றதை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 26 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

0
Shares