இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

பிலியந்தல – ஹெடிகம – அளுத்பார பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிலியந்தல பொலிஸாருக்கு கிடைக்கபெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் கொலையாக இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 22 வயதுடைய இரத்மலான – ஜயசுரனாராம பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0
Shares