இந்தியாவுடனான மகளிர் ICC  கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

ICC  மகளிர் கிண்ண போட்டிகளில் இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி ஹமில்டனில் நடைபெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்திற்காக களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி 44 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தை தொடர்ந்த  நியூசிலாந்து மகளிர் அணி 29.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது

 

0
Shares